ஆன்மிகம்
ஆளைப்பார்த்த அம்மன் கோவிலுக்கு சாமி சிலைகள் காஞ்சி சங்கர மடம் வழங்கியது

ஆளைப்பார்த்த அம்மன் கோவிலுக்கு சாமி சிலைகள் காஞ்சி சங்கர மடம் வழங்கியது

Published On 2021-04-21 08:44 GMT   |   Update On 2021-04-21 08:44 GMT
காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் ஆளைப்பார்த்த அம்மன்கோவில் தக்கார் வெங்கடேசன், மாமண்டூர் வேலன், வாழவந்தல், மாமண்டூர் கிராம மக்ககளிடம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட வாழவந்தல் கிராமத்தில் ஆளைப்பார்த்த அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள வன்னிமரத்தடியில் வைத்து வழிபட விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் தேவைப்பட்டன.

இதுகுறித்து காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதசாமி கோவில் சன்னதி தெருவில் உள்ள சிவா ஸ்தபதியிடம் செய்து கொள்ள அனுமதி வழங்கினார்.

இதனையடுத்து தயாரிக்கப்பட்ட சிலைகள் நேற்று காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் ஆளைப்பார்த்த அம்மன்கோவில் தக்கார் வெங்கடேசன், மாமண்டூர் வேலன், வாழவந்தல், மாமண்டூர் கிராம மக்ககளிடம் வழங்கப்பட்டது.

சிலைகளை பெற்றுக்கொண்ட கிராம மக்கள் விஜயேந்திர சரஸ்வதி சாமிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
Tags:    

Similar News