இந்தியா
பாராளுமன்றம்

ஒமைக்ரான் அச்சுறுத்தல்... பொது கணக்கு குழு நூற்றாண்டு விழாவில் வெளிநாட்டு பிரதிநிதிகள் இல்லை

Published On 2021-12-03 13:18 GMT   |   Update On 2021-12-03 13:18 GMT
பொது கணக்கு குழு நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க வரும்படி பாகிஸ்தான் உள்ளிட்ட 52 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்ற பொது கணக்கு குழுவின் நுற்றாண்டு கொண்டாட்டம் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்பதை வெளிநாட்டு பிரதிநிதிகள் தவிர்த்தனர். 

இது தொடர்பாக பொது கணக்கு குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொது கணக்கு குழு நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க வரும்படி பாகிஸ்தான் உள்ளிட்ட 52 நாடுகளுக்கு வெளியுறவுத்துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, எந்த நாட்டின் பிரதிநிதிகளும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள். 

இந்தியாவின் அழைப்பிற்கு பாகிஸ்தானிடம் இருந்து பதில் வரவில்லை. பல்வேறு நாடுகள் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பயணத்தை தவிர்த்தனர். 

இவ்வாறு அவர்  கூறினார்.
Tags:    

Similar News