வழிபாடு
திருத்தணி கோவிலில் நடைபெறும் படித்திருவிழாவில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி கோவிலில் நடைபெறும் படித்திருவிழாவில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-12-31 08:26 GMT   |   Update On 2021-12-31 08:26 GMT
பக்தர்கள் 365 படிகளுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து மலர் தூவி வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் செய்துஇருந்தனர்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் டிச., 31-ம் தேதி திருப்படித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளன இந்த படிக்கட்டுகள் ஒரு வருடத்திற்கான நாட்களை குறிப்பதால் ஆங்கில புத்தாண்டு வழிபாடு இங்கு விமரிசையாக நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். படிகளில் மஞ்சள், குங்குமம் பூசி கற்பூரம் ஏற்றி வழிபடுவர்.

அதன்படி இன்று திருத்தணி கோவிலில் படித்திருவிழா நடைபெற்றது. காலை 8.30 மணி அளவில் திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.பூபதி, திருத்தணி நகர செயலாளர் வினோத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படித்து விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர், ஒவ்வொரு திருபடிகள் வழியாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து மலர் தூவி வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் செய்துஇருந்தனர்.

இன்று புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறையுடன் தரிசனத்துக்கு வருவது கோரிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags:    

Similar News