செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி இன்னும் தடுப்பூசி போடவில்லை- காரணம் இதுதான்

Published On 2021-06-17 11:11 GMT   |   Update On 2021-06-17 11:11 GMT
காங்கிரஸ் தலைவர் சோனியா கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கோவேக் சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்தப்படுகிறது.

முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கொரோனா தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் செலுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு இருந்ததால் ராகுல்காந்தி இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அதற்காக அவர் காத்திருக்கிறார். இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-



காங்கிரஸ் தலைவர் சோனியா கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டார். ராகுல்காந்தி கடந்த மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போட்டுக்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்து இருந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீண்டு 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் ராகுல்காந்தி தடுப்பூசி போடுவதற்காக காத்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
Tags:    

Similar News