செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

மக்களாட்சிக்கு எதிராக கவர்னர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்- விடுதலை சிறுத்தைகள் கண்டனம்

Published On 2019-09-12 17:46 GMT   |   Update On 2019-09-12 17:46 GMT
கவர்னர் கிரண்பேடி பதவியேற்ற நாள் முதல் மக்களாட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் ஆளும் மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் புதுவையின் ஏஜெண்டாக பணியமர்த்தப்பட்ட கவர்னர் கிரண்பேடி பதவியேற்ற நாள் முதல் மக்களாட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறார். கவர்னரின் அடாவடித் தனத்தை கண்டித்து, புதுவை அரசு உச்சநீதிமன்றத்தின் மூலம் மக்களாட்சிக்கான அதிகாரத்தை நிலை நிறுத் தியும் தொடர்ந்து மக்களுக்கு விரோதமாக செயல் படுகிறார்கள். அரிசிக்கு பதிலாக பணமாக வங்கியில் செலுத்த வேண்டும் என அரசுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.

வங்கியில் பணம் போட்டால் குடும்ப தலைவர் பணத்தை எடுத்து மதுபான கடையில் செலவழித்து விடுகிறார்கள். இதனால் பல்வேறு குடும்பங்கள் பசி பட்டினியில் வாடும் நிலை ஏற்படும். மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் சட்டமன்றத்தில் ஒருமனதாக அனைத்துக்கட்சியின ரும் வேறுபாடு இல்லாமல் முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு கோப்புகள் அனுப்பியும், அந்த இலவச அரிசி வழங்கும் திட்டத்தை திருப்பி அனுப்பி உள்ளார் என்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

இந்நிலையில்முதல்- அமைச்சர், எம்.பி., அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக கிரண் பேடியை சந்தித்து இலவச அரிசி திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கேட்டும், மத்திய அரசை காரணம் காட்டி திசை திருப்புவது வேண்டு மென்றே இந்த அரசு மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகும். மேலும் மத்தியில் உள்ள பா.ஜ.க. கட்சியிடம் நற்பெயர் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுகிறார்.

அது மட்டும் இல்லாமல் உச்சநீதிமன்றம் கவர்னர் மாநில அரசு எடுக்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கு எந்த வகையிலும் தடையாக இருக்க கூடாது, சட்டமன்ற நடவடிக்கையில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்று கூறியும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மக்க ளாட்சிக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவது இந்த ஆட்சி இயங்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

எனவே கிரண்பேடியின் இந்த அடாவடித்தனம் இதே சதிகார போக்கு தொடருமேயானால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேடிக்கை பார்க்க மாட்டோம், கிரண்பேடி புதுவையை விட்டு வெளியேறு என்ற முழக்கத்தை முன் வைத்து மாபெறும் மக்கள் திரள் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தேவ.பொழிலன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News