ஆன்மிகம்
சிவன் வழிபாடு

சிவராத்திரி: இன்று நான்கு கால பூஜையில் பாட வேண்டிய பாடல்

Published On 2021-03-11 05:22 GMT   |   Update On 2021-03-11 05:22 GMT
தவிர்க்க முடியாத காரணங்களால் கோவில்களுக்குச் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. வீட்டிலேயே ஈசனுக்கு பூஜை செய்து அற்புத பலன்களைப் பெறலாம்.
நான்கு காலத்துக்கும் தனித்தனியே சிறிய நான்கு ஷணிக லிங்கங்களை உருவாக்கி, ஒவ்வொரு காலத்துக்குமான விசேஷப் பொருள்களைக் கொண்டு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து வழிபட்டு, அற்புத பலன்களை வீட்டிலிருந்தே வழிபட்டுப் பெறலாம். ஒவ்வொரு காலத்துக்குமான பூஜை விவரங்கள் இங்கே உங்களுக்காக...
மகா சிவராத்திரி!

முதல் கால பூஜை : (இரவு 10 மணி)

வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்

பதிகம்: சிவமகாபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க...
மகா சிவராத்திரி!

இரண்டாம் கால பூஜை : (இரவு 12 மணி)

வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்

பதிகம் : கீர்த்தி திருஅகவல்

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 145
ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே.
மகா சிவராத்திரி!

மூன்றாம் கால பூஜை : ( நள்ளிரவு 2 மணி)

வழிபட வேண்டிய மூர்த்தம் - லிங்கோத்பவர்

பதிகம் : திருவண்டப்பகுதி

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
அரிய அதில் அரிய அரியோன் காண்க
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க

நான்காம் கால பூஜை : (அதிகாலை 4 மணி)

வழிபட வேண்டிய மூர்த்தம் - ரிஷபாரூடர்

பதிகம் : போற்றித் திருஅகவல்

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மகா சிவராத்திரி!
மகாசிவராத்திரி... உள்ளத்தை உருக்கும்சிவப்பாடல்...
Tags:    

Similar News