செய்திகள்
முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்குஅபராதம் விதிக்கப்படுவதையும் படத்தில் காணலாம்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 17 நிறுவனங்களுக்கு அபராதம்

Published On 2021-04-13 02:38 GMT   |   Update On 2021-04-13 11:09 GMT
கொரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம், கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், சுகாதார அதிகாரி ராஜேந்திரன் மற்றும் குழுவினர் மேற்கொண்டு வருகிறார்கள். மாநகர பகுதியில் 60 வார்டுகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம், கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.

மாநகராட்சியில் 2 ஆயிரத்து 639 பணியாளர்கள்கிருமிநாசினி தெளிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் 130 பேருக்கு கொரோனா சளி மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் 15 வேலம்பாளையம், அண்ணா நெசவாளர் காலனி, டி.எஸ்.கே.நகர், சூசையாபுரம், வீரபாண்டி பகுதிகளிலும், 2 வாகனத்தின் மூலமாகவும் மொத்தம் 559 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முககவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முககவசம் அணியாத 66 பேருக்கும், 17 தொழில் நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.48 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகர பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என மொத்தம் 878 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மாநகராட்சி பகுதியில் 5,690 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் தளங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் பயணத்தை தவிர்க்க வேண்டும்.

மாநிலம் விட்டு மாநிலம் பயணிப்பவர்கள் இ-பாஸ் கட்டாயம். ரெயில்வே துறையின் நடவடிக்கைக்கு பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்.

என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News