லைஃப்ஸ்டைல்
தினை பாசிப்பருப்பு பெசரெட்

ஆரோக்கியம் நிறைந்த தினை பாசிப்பருப்பு பெசரெட்

Published On 2020-10-12 04:45 GMT   |   Update On 2020-10-12 04:45 GMT
சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் தினை, பாசிப்பருப்பு சேர்த்து பெசரெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - ஒரு கப்,
தினை அரிசி - முக்கால் கப்,
சின்ன வெங்காயம் - 10,
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப),
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும்.

மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி,  அரைத்து வைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுத்தால்... சத்தான தினை பெசரட் தயார்!

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News