செய்திகள்
கெஜ்ரிவால்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2021-05-18 11:34 GMT   |   Update On 2021-05-18 11:34 GMT
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இன்றைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 22,111 பேர் உயிரிழந்துள்ளனர். 50,863 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 14,02,873 பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

1. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

2. குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவராக இருந்தால் மாதந்தோறும் 2500 ரூபாய் பென்சனாக வழங்கப்படும். நிதியுதவியும் உண்டு.

3. கணவர் இறந்தால் மனைவிக்கு பென்சன், மனைவி இறந்தால் கணவர் பென்சன் பெறலாம். திருமணம் ஆகாத நபர் இறந்திருந்தால் பெற்றோர் பென்சனை பெறமுடியும்.

4. ஏற்கனவே பெற்றோர்களில் ஒருவர் இறந்து, தற்போது கொரோனா தொற்றால் மற்றொருவர் இறந்து குழந்தை தவித்தால், அந்த குழந்தை 25 வயது ஆகும் வரை 2500 ரூபாயை பெற முடியும். அவர்களுக்கு இலவச கல்வியும் வழங்கப்படும்.
Tags:    

Similar News