செய்திகள்
கோப்பு படம்

கொள்ளிடம், பொறையாறு பகுதிகளில் 590 வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-06-07 12:47 GMT   |   Update On 2021-06-07 12:47 GMT
புதுப்பட்டினம் பகுதியில் ஊரடங்கு விதியை மீறி கடைகளை திறந்து வைத்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புதுப்பட்டினம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 60 வாகனங்களை புதுப்பட்டினம் போலீசார் பறிமுதல் செய்து, வாகனம் ஓட்டி வந்த 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புதுப்பட்டினம் பகுதியில் ஊரடங்கு விதியை மீறி கடைகளை திறந்து வைத்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் கொள்ளிடம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய காரணமின்றி சுற்றித்திரிந்த 30 இருசக்கர வாகனங்களை கொள்ளிடம் போலீசார் பறிமுதல் செய்து 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விதிகளை மீறி திறந்து வைத்திருந்த இரண்டு கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல பொறையாறு, செம்பனார்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஊடரங்கை மீறி சாலைகளில் காரணமின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தனர். அவ்வாறு சுற்றித்திரிந்தவளின் 500 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News