செய்திகள்
ஜவாஹிருல்லா

கூடங்குளம் அணு உலை விரிவாக்கம்- ஜவாஹிருல்லா கண்டனம்

Published On 2021-02-23 09:42 GMT   |   Update On 2021-02-23 09:42 GMT
கூடங்குளம் அணு உலை விரிவாக்கத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தமிழக அரசு இவ்விரிவாக்கத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை:

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், கூடங்குளம் அணு உலையில் 5 மற்றும் 6-வது உலைகளுக்கான கட்டுமானத்தை மத்திய அரசு தொடங்கி இருப்பது பாஜக அரசுக்கு தமிழர்கள் மீதும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதும் சிறிதுகூட அக்கரையோ, கவலையோ இல்லை என்பதையே காட்டுகிறது.

அணுவுலையை எதிர்ப்பதில், தம் வாழ்வாதாரம், எதிர்காலம் பற்றி கவலை கொள்வதில் குஜராத் மக்களுக்கும் கூடங்குளம் இடிந்தகரை மக்களுக்கும் ஒரே மாதிரியான அச்சமும் உணர்வும்தானே மேலோங்கி இருக்கும்? குஜராத் முதல்வர் தன் மாநில மக்களின் அச்சத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்தால் பாராட்டுவதும் அதே கோரிக்கையை தமிழ்நாட்டு மக்கள் முன் வைத்தால் தேசத்துரோக குற்றச்சாட்டை அவர்கள் மீது ஏவுவதும் என்ன மாதிரியான நிலைப்பாடு?

இந்த விரிவாக்கத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தமிழக அரசு இவ்விரிவாக்கத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News