ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீப விழாவுக்கான பந்தக்கால் நட்டபோது எடுத்த படம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பந்தகால் நடப்பட்டது

Published On 2021-09-16 07:50 GMT   |   Update On 2021-09-16 07:50 GMT
இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பந்த காலுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் பிச்சகமிராசுகள் ரகுராமன் மற்றும் விஜயகுமார் மங்கள வாத்தியங்கள் முழங்க அண்ணாமலையார் கோவிலுக்கு உரித்தான ஒடல் வாத்தியங்கள் இசைக்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோ‌ஷத்துடன் பந்தக்காலை சுமந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள மைதானத்தில் நட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாட வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேர்களுக்கு விசே‌ஷ பூஜை செய்யப்பட்டு பின்பு பந்தகாலுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இணை ஆணையர் அசோக்குமார், கண்காணிப்பாளர் பத்ராச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
Tags:    

Similar News