செய்திகள்
பிரேசில் சென்றடைந்த தடுப்பூசி மருந்து

20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றடைந்தது- மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்

Published On 2021-01-23 03:40 GMT   |   Update On 2021-01-23 03:40 GMT
இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.
புதுடெல்லி:

இந்தியாவில் இருந்து வர்த்தக ரீதியிலான கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி முதல் ஏற்றுமதியாக பிரேசில் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு விமானம் மூலம் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன. 

மருந்து ஏற்றுமதி செய்ததற்கு பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனரோ நன்றி தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து உதவிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி என்று போல்சனரோ டுவீட் செய்துள்ளார்.  உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க, சிறந்த நட்பு நாட்டை கொண்டிருப்பது பெருமைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிரேசிலுடன் இணைந்து பணியாற்றுவது பெருமைக்குரியது என்று பிரதமர் மோடியும் டுவீட் செய்துள்ளார்.
Tags:    

Similar News