தொழில்நுட்பம்

இரத்த கொதிப்பை கண்காணிப்பதுடன் ராணுவ தரத்தில் உருவாகி இருக்கும் சாம்சங் கேலக்ஸி வாட்ச்

Published On 2019-02-21 07:46 GMT   |   Update On 2019-02-21 07:46 GMT
சாம்சங் நிறுவனம் இரத்த கொதிப்பை கண்காணிப்பதுடன் ராணுவ தரத்தில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. #GalaxyWatchActive



சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் முன்பை விட ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் உடற்பயிற்சி, உறக்கம், மன அழுத்தம் மற்றும் இரத்த கொதிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

மேம்பட்ட கேலக்ஸி ஹெரிடேஜ், ஃபிட்னஸ் மற்றும் உடல்நலன் சார்ந்த அம்சங்களை கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் கொண்டிருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இரத்த கொதிப்பை கண்காணிக்கும் வசதி கொண்டிருக்கிறது. இதற்கென பயனர்கள் மை பி.பி. லேப் (My BP Lab) செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த செயலியை மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.  

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் பயனர் ஓடுவது, நடப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தானாக கண்டறிந்து அதற்கேற்ற விவரங்களை வழங்கும். இந்த வாட்ச் அணிந்தபடி 39 பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் அன்றாட முன்னேற்றத்திற்கு இலக்கு நிர்ணயித்து, அதனை கண்காணிக்கவும் முடியும். 



1.1 இன்ச் 360x360 பிக்சல் ஃபுல் கலர் AOD டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. 25 கிராம் எடை கொண்டிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் எக்சைனோஸ் 9110 பிராசஸர், 768 எம்.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. 

இத்துடன் 5ATM+ IP68 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் MIL-STD-810G சான்று பெற்றிருப்பதால் ராணுவ தரத்திற்கு இணையான உறுதித்தன்மையை கொண்டிருக்கிறது. இதில் டைசன் சார்ந்த வியரபிள் ஓ.எஸ். 4.0 வழங்கப்பட்டிருக்கிறது.

கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்தவரை ப்ளூடூத் 4.2, வைபை, 230 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இணைந்து வேலை செய்யும். இத்துடன் மூன்றாம் தரப்பு செயலிகளை சப்போர்ட் செய்யும். 

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சில்வர், பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சீ கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 199.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 7 ஆம் தேதி துவங்குகிறது. இதனை வாங்குவோருக்கு வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News