செய்திகள்
சரத் கமல்

டேபிள் டென்னிஸ் பிரிவு - இந்தியாவின் சரத் கமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்

Published On 2021-07-26 02:17 GMT   |   Update On 2021-07-26 07:42 GMT
டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுக்கல் வீரர் தியாகோ அபோலோனியாவை எதிர்கொண்டார்.

இதில் 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 என்ற கணக்கில் சரத் கமல் வென்றார். இதன்மூலம்  4-2 என்ற செட் கணக்கில் வென்ற சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News