செய்திகள்
உ.பி. காவல்துறை சின்னம்

லவ் ஜிகாத் தடுப்பு சட்டத்தின்கீழ் உத்தர பிரதேசத்தில் முதல் வழக்கு

Published On 2020-11-29 09:09 GMT   |   Update On 2020-11-29 09:09 GMT
உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை அவசர சட்டத்தின்கீழ் முதல் வழக்கு பரேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டம் (லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்) பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, திருமணம் செய்தால் அந்த திருமணம் செல்லாது. அனுமதி அவ்வாறு திருமணம் செய்தவரை, ஜாமினில் வர முடியாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்யும். 

எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்களை கட்டாயமாக மதம் மாற்றினால் ரூ.25,000 அபராதத்துடன் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின்கீழ் முதல் வழக்கு, பரேலி மாவட்டத்தில் உள்ள தியோரனியா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் நம்பிக்கையை வலுக்கட்டாயமாக மாற்ற முயற்சித்ததாகவும், அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் ஒரு நபர் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
Tags:    

Similar News