ஆன்மிகம்
முத்தாரம்மன்

இலந்தையடித்தட்டு முத்தாரம்மன் கோவில் கொடை விழா

Published On 2021-04-05 05:55 GMT   |   Update On 2021-04-05 05:55 GMT
பிள்ளையார்புரம் அருகே உள்ள இலந்தையடித்தட்டு முத்தாரம்மன் கோவில் கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
பிள்ளையார்புரம் அருகே உள்ள இலந்தையடித்தட்டு முத்தாரம்மன் கோவில் கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

நாளை அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, நள்ளரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

7-ந்தேதி காலை 6 மணிக்கு முளைப்பாரி பூஜையும், அன்னதானமும், இரவு 9 மணிக்கு சிங்காரிமேளத்துடன் வாகன பவனியும், 8-ந்தேதி பகல் 12 மணிக்கு தீபாராதனையும், மதியம் பிரசாதம் வழங்குதலுடன் கொடை விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இலந்தையடித்தட்டு ஊர் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News