ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.

சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2020-08-19 09:17 GMT   |   Update On 2020-08-19 09:17 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில், ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாத அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திருச்சி மாவட்டம், மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு நேற்று ஆவணி அமாவாசை என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.

மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் காக்க வேண்டியும் நடந்த இந்த சிறப்பு பூஜையில், ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு அபிஷேகத்தை இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்மூலம் ஏராளமான பக்தர்கள் வீட்டிலிருந்தே சிறப்பு அபிஷேகத்தை கண்டு வழிபட்டனர். இருப்பினும் சிலர் குடும்பத்தினருடன் சமயபுரம் கோவிலுக்கு வந்து கோவில் முன் சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் அம்மனை நோக்கி பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.
Tags:    

Similar News