ஆன்மிகம்
மின்னொளியில் ஜொலித்த தஞ்சை பெரியகோவில்

மின்னொளியில் ஜொலித்த தஞ்சை பெரியகோவில்

Published On 2021-03-12 05:37 GMT   |   Update On 2021-03-12 05:37 GMT
தஞ்சை பெரியகோவில் முழுவதும் விளக்குகள் எரியவிடப்பட்டன. இதனால், கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. இந்தப் பொலிவான காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
தஞ்சை பெரியகோவில் கோபுரத்தை நோக்கி மின் விளக்குகள் இருந்தாலும், அது போதுமான அளவுக்கு பொலிவை தரவில்லை எனவும், இரவு நேரத்திலும் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாமல்லபுரத்தை போல் தஞ்சை பெரியகோவிலையும் இரவு நேரத்தில் மிளிர வைக்கும் வகையில் மின்னொளி விளக்குகள் அமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கான அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, 216 அடி உயர கருவறை கோபுரம், பெரியநாயகி சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள், ராஜராஜன் வாயில் கோபுரம், கேரளாந்தகன் வாயில் கோபுரம், மராட்டி வாயில் உள்ளிட்டவற்றில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

இந்த விளக்குகள் சில நாள்களுக்கு முன்பு எரிய விடப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவில் முழுவதும் இந்த விளக்குகள் நேற்றுமாலை முதல் எரியவிடப்பட்டன. இதனால், கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. இந்தப் பொலிவான காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் கூறுகையில், தற்போது சோதனை அடிப்படையில் எரிய விடப்பட்டு வருகிறது. விரைவில் தொடர்ந்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மின்னொளியில் ஜொலித்த தஞ்சை பெரியகோவில் தஞ்சை பெரியகோவில் கோபுரத்தை நோக்கி மின் விளக்குகள் இருந்தாலும், அது போதுமான அளவுக்கு பொலிவை தரவில்லை எனவும், இரவு நேரத்திலும் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாமல்லபுரத்தை போல் தஞ்சை பெரியகோவிலையும் இரவு நேரத்தில் மிளிர வைக்கும் வகையில் மின்னொளி விளக்குகள் அமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கான அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, 216 அடி உயர கருவறை கோபுரம், பெரியநாயகி சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள், ராஜராஜன் வாயில் கோபுரம், கேரளாந்தகன் வாயில் கோபுரம், மராட்டி வாயில் உள்ளிட்டவற்றில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

இந்த விளக்குகள் சில நாள்களுக்கு முன்பு எரிய விடப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவில் முழுவதும் இந்த விளக்குகள் நேற்றுமாலை முதல் எரியவிடப்பட்டன. இதனால், கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. இந்தப் பொலிவான காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் கூறுகையில், தற்போது சோதனை அடிப்படையில் எரிய விடப்பட்டு வருகிறது. விரைவில் தொடர்ந்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News