ஆன்மிகம்
ராமநவமி: கோவில்களில் சிறப்பு பூஜை

ராமநவமி: கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2021-04-22 04:58 GMT   |   Update On 2021-04-22 04:58 GMT
ராமபிரான் அவதரித்த நாள் ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
ராமபிரான் அவதரித்த நாள் ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 8.30 மணிக்கு மகாதீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 6.30 மணிக்கு மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம் ஆகியவை நடந்தது.

காலை 9 மணிக்கு சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண கோலத்தில் ராமரும், சீதையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் உபசாரபூஜைகள், மகா தீபாராதனை, தீர்த்தம் மற்றும் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது.

மாலை 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும், வீணை கச்சேரி ஆகியவை நடந்தது. ஆனைமலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பால், தயிர், இளநீர், பூக்கள், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பச்சரிசி மாவு, தேன் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் துளசி, அரளி, மல்லிகை உள்ளிட்ட 9 வகையான பொருட்களை கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு மற்றும் பிரசாரம் வழங்கப்பட்டது.

இதேபோன்று பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கோட்டூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராமர் கோவில்களில் ராமநவமியையொட்டி சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News