ஆன்மிகம்
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா பால் கம்பம் நடும் நிகழ்ச்சி

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா பால் கம்பம் நடும் நிகழ்ச்சி

Published On 2021-03-25 06:09 GMT   |   Update On 2021-03-25 06:09 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா முக்கியமான ஒன்றாகும். இந்தசிரசு திருவிழா வருகிற மே மாதம் 15-ந் தேதி நடக்கிறது. சிரசு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி குழு தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்பட முன்னாள் அறங்காவலர்கள், திருப்பணி கமிட்டியினர், கோபாலபுரம் பொதுமக்கள், விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

கெங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 14-ந் தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News