ஆன்மிகம்
சிவா

கன்னியாகுமரி பகுதியில் 12 சிவாலயங்களில் சிவராத்திரி விழா இன்று நடக்கிறது

Published On 2021-03-11 04:39 GMT   |   Update On 2021-03-11 04:39 GMT
கன்னியாகுமரி பகுதியில் உள்ள 12 சிவாலயங்களில் சிவராத்திரி விழாவையொட்டி இன்று இரவு 4 கால பூஜைகள் நடக்கிறது.
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு அபிஷேகம், 7.30மணிக்கு தீபாராதனை, 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 8.30 மணிக்கு முதல் கால பூஜை, 10.30 மணிக்கு 2-ம் கால பூஜை, 12.30 மணிக்கு 3-ம் கால பூஜை, 3.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது.

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள சக்கரதீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் மகாசிவராத்திரி விழாயொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு பக்தி மெல்லிசை கச்சேரி, 6.15 மணிக்கு முதல் கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு, 9.15 மணிக்கு 2-ம் கால அபிஷேகம், 10 மணிக்கு தீபாராதனை, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, நள்ளிரவு 12.15 மணிக்கு 3-ம் கால அபிஷேகம், 1 மணிக்கு சமய சொற்பொழிவு, 3.15 மணிக்கு 4-ம் கால அபிஷேகம், அதிகாலை 4 மணிக்கு புஷ்பாபிஷேகம், 4.45 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

கன்னியாகுமரி அடுத்த மகாதனபுரம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் மகாசிவராத்திரி விழாயொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அன்னதானம், 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு ஸ்ரீருத்ர ஜெபம், 8.30 மணிக்கு முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இதேபோல வடக்கு தாமரைகுளத்தில் பெரிய பாண்டீஸ்வரர் உடைய நயினார் கோவில், கன்னியாகுமரி சன்னதி தெருவிலுள்ள காசி விஸ்வநாதர் கோவில், கீழ ரத வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம், பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்றில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில், தேரூரில் உள்ள எடுத்தாயுதமுடைய நாயனார் கோவில், தேரிவிளை சிவன் கோவில் உள்பட 12 சிவாலயங்களில் சிவராத்திரி விழாவையொட்டி இன்று இரவு 4 கால பூஜைகள் நடக்கிறது.
Tags:    

Similar News