செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நாளை 2-ம் கட்ட கலந்தாய்வு

Published On 2021-09-02 13:59 GMT   |   Update On 2021-09-02 13:59 GMT
சிக்கண்ணா கல்லூரியில் 2021-2022 ம்கல்வி ஆண்டுக்கான இளநிலைப் பட்டவகுப்பு மாணவர் சேர்க்கையின் முதல் கட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 25ந்தேதி தொடங்கி செப்டம்பர் 1ந்தேதி வரை நடைபெற்றது.
திருப்பூர் :

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு  நாளை 3-ந்தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிக்கண்ணா கல்லூரியில் 2021-2022 ம் கல்வி ஆண்டுக்கான இளநிலைப்பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கையின் முதல் கட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 1-ந்தேதி வரை நடைபெற்றது.

இதில் வணிகவியல் சார்ந்த பாடப்பிரிவுகளிலும், அறிவியல் பாடப்பிரிவுகளிலும் சில இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான இரண்டாம் 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை 3-ந்தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

கலை, வணிகவியல் பாடப் பிரிவுகளில் தரவரிசை எண் 1112 முதல் 1500 வரையிலும், தமிழ் இலக்கியப் பிரிவில் தரவரிசை எண் 801 முதல் 1200 வரையிலும் உள்ள மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தரவரிசைக்கான சேர்க்கை கடிதத்தை கல்லூரி இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு வர வேண்டும். மேலும்  இணையவழி மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்தையும், அனைத்து சான்றிதழ்கள் மற்றும் நகல்களையும் எடுத்துவர வேண்டும்.

அதே வேளையில் மேற்கண்ட தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்று முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்காதவர்களும் இந்த 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News