செய்திகள்
சின்மயானந்தா

மாணவி பாலியல் புகார் விவகாரம்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை

Published On 2019-09-13 07:22 GMT   |   Update On 2019-09-13 07:22 GMT
சட்ட கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சின்மயானந்தாவிடம் சிறப்பு விசாரணைக்குழு 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஷாஜகான்பூர்:

உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

இந்த வீடியோ வெளியிட்ட பின்னர் அந்த மாணவி மாயமானார். பின்னர் ராஜஸ்தானில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இது தொடர்பாக மாணவியின் தந்தை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி, விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை புகார் அளித்த மாணவியிடம் 11 மணி நேரம் சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு விசாரணை நடத்தியது.



இதற்கிடையே இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு தயாராக இருப்பதாக சின்மயானந்தாவின் வக்கீல் கூறியிருந்தார்.

இந்நிலையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு, மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.



Tags:    

Similar News