செய்திகள்
மறியலில் ஈடுபட்ட மக்களை மடக்கிய போலீசார்

ஓட்டுக்கு பணம் தரவில்லை எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் - ராசிபுரத்தில் பரபரப்பு

Published On 2021-04-05 23:44 GMT   |   Update On 2021-04-05 23:44 GMT
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராசிபுரம்:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்த நிலையில், பணப்பட்டுவாடாவில் யாராவது ஈடுபடுகின்றனரா என்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராசிபுரம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தில் உள்ள அம்மன் நகர் பகுதியில் அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதற்காக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த அரசியல் கட்சியினர் பணம் கொடுக்காமல் அடுத்த பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து 20-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரை கண்டதும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர். அதில் 5 பேரை கைது செய்த ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் வெளிப்படையாக பணம் கேட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News