செய்திகள்
வெண்ணாற்றின் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை காணலாம்

வெண்ணாற்றின் கரையோரத்தில் உடைப்பு ஏற்படும் அபாயம்- பொதுமக்கள் அச்சம்

Published On 2020-10-16 09:41 GMT   |   Update On 2020-10-16 09:41 GMT
கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றின் கரையோரத்தில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர்-வடபாதிமங்கலம் சாலையையொட்டி வெண்ணாறு உள்ளது. இந்த வெண்ணாற்றில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகளவில் சென்றது. இதனால் நேற்று நாகங்குடி என்ற இடத்தில் வெண்ணாற்றின் கரையோரத்தில் மணல் சரிந்தது. இதனால் கரையோர பகுதியில் பள்ளம் ஏற்பட்டு ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டு இருப்பதால் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்து விபரீதம் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் நாகங்குடி, பழையனூர், சாத்தனூர், காக்கையாடி, ஓவர்ச்சேரி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளனர். ஆற்றின் கரையோர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News