இஸ்லாம்
சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா விடிய, விடிய நடந்தது

Published On 2022-02-19 04:05 GMT   |   Update On 2022-02-19 04:05 GMT
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா நேற்று இரவு நடைபெற்றது. இத்தகைய சிறப்பு நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஆண்டுதோறும் ரஜப் பிறை மாதத்தில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான சந்தனகூடு திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சந்தனக்கூடுவிழா நேற்று இரவு நடைபெற்றது.

விழாவையொட்டி பெரியரத வீதியில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் சுமார் 25 அடி உயரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டு தயாராக நின்றது.இந்த நிலையில் செம்பில் வாசனை கமழும் சந்தனம் நிரப்பப்பட்டு தயாரானது.

இதனை அடுத்து சந்தனக்கூடு பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வலம் வந்தது.இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.சந்தனகூடு ஊர்வலத்தை தொடர்ந்து மலையிலுள்ள தர்காவுக்கு சந்தன செம்பு எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து தர்காவில் சந்தனம் பூசப்பட்டது.அங்கு முஸ்லிம்கள் பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர். இத்தகைய சிறப்பு நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News