செய்திகள்
மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ்

Published On 2021-10-13 19:23 GMT   |   Update On 2021-10-13 19:23 GMT
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்செரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

89 வயதான மன்மோகன் சிங் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும்  மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News