ஆட்டோமொபைல்
கே.டி.எம். டியூக் 790

கே.டி.எம். டியூக் 790 இந்திய வெளியீடு உறுதியானது

Published On 2019-08-23 07:08 GMT   |   Update On 2019-08-23 07:08 GMT
கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீடு உறுதியானது.



கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 790 இந்திய வெளியீடு இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் நடைபெற இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளின் இந்திய விற்பனைக்கான அனுமதியே அதன் வெளியீடு தாமதமாக காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரு மாதத்திற்குள் விற்பனைக்கு அனுமதி கிடைக்கும் என கே.டி.எம். எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

இந்தியாவில் கே.டி.எம். டியூக் 790 சி.கே.டி. முறையில் கொண்டு வரப்படுகிறது. மேலும், தற்சமயம் 200-க்கும் குறைவான வாகனங்களை இருப்பதால், 790 உற்பத்தி பணிகளை நிறுத்திவிட்டு, அடுத்த ஆண்டு முதல் கே.டி.எம். டியூக் 890 மாடலை உருவாக்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.

கே.டி.எம். டியூக் 790 மாடலில் LC98 799சிசி லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 102.5 பி.ஹெச்.பி. பவர், 87 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.



கே.டி.எம். டியூக் 790 மாடலில் 43 எம்.எம். அப்சைடு டவுன் ஃபோர்க், WP அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டூயல் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் வழங்கப்படுகிறது. 

கே.டி.எம். டியூக் 890 பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், இந்த மோட்டார்சைக்கிள் 790 வேரியண்ட்டை விட 15 பி.ஹெச்.பி. கூடுதல் திறன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பிரேக்கிங் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்களில் அப்டேட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

இந்தியாவில் கே.டி.எம். டியூக் 790 விலை ரூ. 7.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News