செய்திகள்
சூரியசக்தி மின் விளக்குகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

செஞ்சியில் சூரியசக்தி மின் விளக்குகள்- அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

Published On 2021-07-27 05:55 GMT   |   Update On 2021-07-27 05:55 GMT
செஞ்சி பேரூராட்சியில் குடியிருப்புகள் அதிகரித்துவிட்டன. அதற்காக கூடுதலாக மின் விளக்குகள் அமைக்க வேண்டி உள்ளது.
செஞ்சி:

செஞ்சி பேரூராட்சி சிங்கவரம் சாலையில் ரூ.6 லட்சம் மதிப்பிலும், செஞ்சி கிருஷ்ணர் கோவில் அருகே ரூ.1.50 லட்சம் மதிப்பிலும், சந்தை மேடு பகுதியில் ரூ.1 லட்சம் மதிப்பிலும் புதிதாக சோதனை முறையில் சூரிய சக்தி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், செஞ்சி பேரூராட்சியில் குடியிருப்புகள் அதிகரித்துவிட்டன. அதற்காக கூடுதலாக மின் விளக்குகள் அமைக்க வேண்டி உள்ளது. வழக்கமான மின் விளக்குகளுக்கு தற்போது மாதம் ரூ.5 லட்சம் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இது மேலும் உயராமல் இருக்க சோதனை முறையில் சூரியசக்தியில் இயங்கும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் போதிய அளவில் வெளிச்சம் கிடைத்தால், எதிர்காலத்தில் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளை சேர்ந்த அனைத்து பகுதிகளிலும் சூரியசக்தி மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மின் கட்டண தொகை மிச்சமாகும் என்றார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், துப்புரவு ஆய்வாளர் பார்கவி, மேற்பார்வையாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஜான் பாஷா, செயல் மணி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News