லைஃப்ஸ்டைல்
இன்டக்‌ஷன் அடுப்புகள்

பெண்களுக்கு எந்த சூழ்நிலையிலும் கைகொடுக்கும் இன்டக்‌ஷன் அடுப்புகள்

Published On 2019-10-02 06:05 GMT   |   Update On 2019-10-02 06:05 GMT
பெண்கள் அவசரமாக சமையலை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் கேஸ் அடுப்புகளுடன் இன்டக்‌ஷன் ஸ்டவ்வையும் உபயோகித்து சமையலை முடிக்கலாம்.
பத்து வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இன்னும் பிரபலமடைந்திருப்பவை இன்டக்‌ஷன் அடுப்புகள் என்று சொல்லலாம். கேஸ் அடுப்பு வைத்திருப்பவர்களும் இந்த அடுப்பை தங்கள் வீடுகளில் வைத்து உபயோகிக்கின்றார்கள் என்பது மற்றொரு சிறப்பு.

கேஸ் தீர்ந்து விட்டதா கவலை வேண்டாம். கேஸ் அடுப்பில் சமைக்கும் அனைத்து சமையலையும் இன்டக்‌ஷன் அடுப்பில் செய்ய முடியும். அவசரமாக சமையலை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் கேஸ் அடுப்புகளுடன் இன்டக்‌ஷன் ஸ்டவ்வையும் உபயோகித்து சமையலை முடிக்கலாம்.

இன்டக்‌ஷன் ஸ்டவ்வின் பாகங்கள் மற்றும் எவ்வாறு செயல்படுகின்றது என்பதையும் இப்பொழுது பார்ப்போம்.

அகலமான மைக்ரோக்றிஸ்டல் கண்ணாடி பேனலால் செய்யப்பட்ட பலவை போன்ற அமைப்பு. அதன் கீழே கன்ட்ரோல் பேனல் தொடுதிரை உள்ளது. அதில் சமைக்க வேண்டிய பொருளின் தன்மை, வெப்பநிலையை மேன்யுவலாக அதிகரித்துக் குறைப்பது அல்லது ஆட்டோமேடிக் கன்ட்ரோல் மற்றும் ஆன் மற்றும் ஆஃப் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் மேற்புறம் வட்டங்கள் போட்டு சமைக்க வேண்டிய பாத்திரம் வைக்க வேண்டிய இடத்தைச் சுட்டிக் காட்டியிருப்பார்கள்.

இந்த அடுப்பின் அடிப்புற நான்கு ஓரங்களிலும் குமிழ் போன்ற அமைப்பு வைக்கப்பட்டு அடுப்பானது வைக்கும் பரப்பின் மேல் தொடர்பு கொள்ளாதவாறு பொருத்தப்பட்டிருக்கும். மேலும், சூடானது வெளியேற சிறிய ஏர் வென்ட் இருக்கும்.

இன்டக்‌ஷன் ஸ்டவ்வை ஆன் செய்தவுடன் அடுப்பின் உள்ளிருக்கும் காயில்களில் மின்சாரமானது புகுந்து மின்காந்தப் புலத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் அதன் சூடானது நாம் கையை வைத்தால் அறிய முடியாது. ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் செய்யப்பட்ட பாத்திரங்களை அடுப்பின் மேல் வைக்கும் பொழுது, இந்த காந்தப் புலமானது சிறிய அளவில் மின்சாரத்தைக் தூண்டி பாத்திரத்தில் வைக் கப்பட்டுள்ள உணவுப் பொருளை சமைக்க உதவுகின்றது.

பயன்கள்

* மிகக் குறைந்த நேரத்தில், அதிக விரைவாக உணவுப் பொருளை சமைக்கின்றது.

* கேஸ் ஸ்டவ் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டவ்களை விட அதிக ஆற்றல் திறன் கொண்டது.

* இதைப் பராமரிப்பதும் சுத்தம் செய்வதும் எளிது.

* முற்றிலும் பாதுகாப்பாகச் சமைக்கலாம்.

இந்த அடுப்பில் வைத்து சமைப்பதற்கென்றே பிரத்தியேகமான பாத்திரங்கள் வந்து விட்டன. அதிலும், இன்டக்‌ஷன் குக்கர் மற்றும் இன்டக்‌ஷன் தோசைத்தவா மிகவும் அற்புதமாக வேலை செய்கின்றது.

கேஸ் ஸ்டவ்வில் தோசை எவ்வாறு முறுகலாக வருமோ அதேபோல் இன்டக்‌ஷன் ஸ்டவ்வில் இன்டக்‌ஷன் தவா மூலம் ஊற்றப்படும் தோசையும் நம் விருப்பத்திற்கும் சுவைக்கும் ஏற்ப முறுகலாகவும், மென்மையாகவும் ஊற்ற முடிகின்றது.

இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இன்டக்‌ஷன் குக்கர் மற்றும் இன்டக்‌ஷன் தவாவை கேஸ் அடுப்பிலும் வைத்துச் சமைக்கலாம்.

அதே போல், ஸ்டீல் பாத்திரத்தின் அடிப்பகுதி ஃப்ளாட்டாக இருக்கும் எந்தப் பாத்திரத்தையும் இந்த அடுப்பில் உபயோகிக்க முடியும். இந்த அடுப்புகளை வாங்கும்போதே இவற்றில் வைத்து சமைக்கக்கூடிய சில பாத்திரங்களையும் கொடுக்கிறார்கள். அவற்றை உபயோகித்து அனைத்து வகைச் சமையலையும் செய்யலாம். என்ன சமையலைச் செய்யப்போகிறோம், அதாவது ஃப்ரை செய்யப் போகிறோம் என்றால், தொடுதிரையில் இருக்கும் அந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் அந்தச் சமையலுக்குத் தேவையான வெப்பசக்தி மற்றும் மணித்துளிகளானது அதனுள்ளேயே தொகுக்கப்பட்டு இருப்பதால் அதிகப்படியாக சமைக்கப்படுவதோ, கருகிப் போய் வீணாவது போன்ற பேச்சுக்கே இடமில்லை. பால் காய்ச்சுவதென்றால் அதற்குரிய ஆப்ஷனை செலக்ட் செய்து விட்டால் பால் காய்ந்து அடங்குமே தவிர பொங்காது.

அடுப்பு ஆனில் இருக்கும்போது தெரியாமல் தொட்டு விட்டாலோ அல்லது நமது துணியானது அதன் மேல் பட்டாலோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
Tags:    

Similar News