உலகம்
ஜே-10சி போர் விமானம்

ரபேலுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து ஜே-10சி போர் விமானங்களை வாங்கிய பாகிஸ்தான்

Published On 2021-12-30 16:53 GMT   |   Update On 2021-12-30 16:53 GMT
அடுத்த ஆண்டு நடைபெறும் பாகிஸ்தான் தின விழாவில், அனைத்து வானிலையிலும் இயக்கப்படும் ஜே-10சி விமானங்களின் முழு படையும் பங்கேற்கும் என பாகிஸ்தான் உள்துறை மந்திரி தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்:

அதிநவீன போர் விமானமான ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியதற்கு பதிலடியாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-10சி போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இந்த விமானங்களை அனைத்து வானிலைகளிலும் தங்குதடையின்றி இயக்க முடியும். மொத்தம் 25 விமானங்களை வாங்கியிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது சொந்த நகரமான ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அடுத்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் தின விழாவில், அனைத்து வானிலையிலும் இயக்கப்படும் ஜே-10சி விமானங்களின் முழு படையும் பங்கேற்கும் என்றார்.

சீனா தனது மிகவும் நம்பகமான போர் விமானங்களில் ஒன்றான ஜே-10 சி விமானங்களை வழங்குவதன் மூலம் அதன் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு உதவி செய்வது வெளிப்படையாக தெரிகிறது.
Tags:    

Similar News