செய்திகள்
பிரியங்கா காந்தி

இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்: இது வாக்குறுதி அல்ல, உத்தரவாதம் என்றார் பிரியங்கா காந்தி

Published On 2021-03-02 12:24 GMT   |   Update On 2021-03-02 17:36 GMT
அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் இன்று தேஜ்புரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது ‘‘நாங்கள் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவோம். தேயிலை தோட்டத்தில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு தினக்கூலி 365 ரூபாயாக உயர்த்தப்படும். ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். இது அனைத்தும் வாக்குறுதிகள் அல்ல. உத்தரவாதம்.

எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போது, இங்கு CAA செயல்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்படும். ஒவ்வொரு மாதமும் 200 யுனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News