செய்திகள்
அமைச்சர் செந்தில்பாலாஜி

உள்ளகரம்-புழுதிவாக்கத்தில் புதிய துணை மின் நிலையம்- அமைச்சர் அறிவிப்பு

Published On 2021-09-06 08:04 GMT   |   Update On 2021-09-06 08:31 GMT
தமிழ்நாடு முழுவதும் ஓவர்லோடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வராமல் இருப்பதற்கு 8,905 புதிய மின் மாற்றிகளை அமைப்பதற்கு கொளத்தூரில் முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை:

சட்டசபையில் இன்று உள்ளகரம்-புழுதிவாக்கம் பகுதிகளுக்கு துணை மின்நிலையம் அமைக்கப்படுமா? என்று உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-

உள்ளகரம் - புழுதிவாக்கத்தில் பெருகி வரும் எதிர்கால மின் பளுவை கருத்தில் கொண்டு அங்கு ஒரு புதிய துணை மின் நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டு அதற்கான நிலம் கண்டறியப்பட்டு வருகிறது. நிலம் கண்டறியப்பட்டவுடன் அதை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு புதிய துணைமின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கும்.

 


தமிழ்நாடு முழுவதும் ஓவர்லோடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வராமல் இருப்பதற்கு 8,905 புதிய மின் மாற்றிகளை அமைப்பதற்கு கொளத்தூரில் முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு பகுதிகளிலும் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்படுகிறது.

இதே போல் சென்னையில் புதைவட கம்பிகள் பதிப்பது எந்தெந்த இடத்தில் விடுபட்டுள்ளது என்பதையும் கண்டறிந்து புதைவட கேபிள் பதிக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- 11 கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

Tags:    

Similar News