தமிழ்நாடு
விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணையை வழங்கிய அமைச்சர் பொன்முடி

10 ஆண்டுகளில் செய்ய முடியாததை 10 மாதங்களிலேயே நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்- அமைச்சர் பொன்முடி பெருமிதம்

Published On 2022-04-17 11:39 GMT   |   Update On 2022-04-17 11:39 GMT
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் அதனை பெற முடியாத சூழல் இருந்து வந்ததாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
விழுப்புரம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மூலம் ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் செய்யும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சி முடிந்ததும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான புதிய மின் இணைப்புக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதன் முதலாக கொண்டு வந்து அவர்களது வாழ்வில் மாற்றம் கண்ட தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் அதனை பெற முடியாத சூழல் இருந்து வந்தது. மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று முதல்அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கு முழுமையாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி இந்த ஓராண்டு காலத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாததை இந்த 10 மாதங்களிலேயே நிறைவேற்றியுள்ளார். விவசாயிகளின் நலனுக்காக தனி பட்ஜெட்டை கொண்டு வந்து நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்காக முழுமையாக உழைத்து வருகிற ஒரே தலைவர் இந்தியாவிலேயே தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

எனவே விவசாயிகளும், பொதுமக்களும் தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும்” என்றார். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் செல்வசேகரன், விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மதனகோபால், செயற்பொறியாளர் சைமன்சார்லஸ், உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா, விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருவெண்ணைநல்லூர் மரகதம் கந்தசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ், உதவி மின் பொறியாளர்கள் பழனி, விவேக், சீனிவாசன், மாவட்ட கவுன்சிலரும் தி.மு.க. ஒன்றிய செயலாளருமான விசுவநாதன், ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், தி.மு.க. ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன்,

ஒன்றியக்குழு துணைத் தலைவர் கோமதி நிர்மல்ராஜ், பேரூராட்சி தலைவர் அஞ்சுகம் கணேசன் தி.மு.க. நகர செயலாளர் கணேசன் பேரூராட்சி துணை தலைவர் ஜோதி, ஏமப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், விவசாயிகள் ரமேஷ்குமார், செந்தில் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த 324 விவசாயிகளுக்கு வெள்ளை மீட்டர் கார்டு வழங்கும் விழா கெங்கராம்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கண்டமங்கலம் கோட்ட செயற் பொறியாளர் சிவகுரு தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் ஏழுமலை, கேசவன், இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கண்டமங்கலம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.எஸ்.வாசன், வானூர் ஒன்றிய குழு தலைவர் உஷாமுரளி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வெள்ளை மீட்டர் கார்டு வழங்கி பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கண்டமங்கலம் கோட்டத்தில் உள்ள உதவி மின் பொறியாளர்கள் கார்மேகம், தமிழ்செல்வி, வெங்கடேசன், மணிகண்டன், சுமன்சந்திரன், சுகுமார், தேவலிங்கம், வசந்தகுமார், தெய்வமணி, செந்தில்குமார், மணிகண்டன், ஆதிமூலம், நடராஜன், சேகரன், ஜோசப் ரிச்சர்ட்ஸ், தமிழ்வேள், இரகுநாதன், புவனேஸ்வரி மற்றும் வீராணம் ஆற்றலரசு, கெங்கராம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உட்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News