ஆட்டோமொபைல்

இந்தியாவில் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் 2019 அறிமுகம்

Published On 2019-02-27 11:26 GMT   |   Update On 2019-02-27 11:26 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் 2019 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #MarutiIgnisFacelift



மாருதி சுசுகி நிறுவனம் 2019 இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஃபேஸ்லிஃப்ட் காரின் துவக்க விலை ரூ.4.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டாப்-எண்ட் விலை ரூ.7.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சில புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டிருக்கிறது. புதிய மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் டாப்-எண்ட் மாடல்களான சீட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்களில் ரூஃப் ரெயில்கள் காணப்படுகின்றன.

பாதுகாப்பு உபகரணங்களை பொருத்தவரை புதிய இக்னிஸ் 2019 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டிருக்கிறது. அதில் ரியர்வியூ பார்க்கிங் கேமரா / சென்சார்கள், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ஹை-ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், சீட்-பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், டூயல் ஏர்பேக் மற்றும் ஐசோபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.



இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2-லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

மாருதி இகனிஸ் ஃபேஸ்லிஃப்ட் சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்பா என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. நான்கு வேரியண்ட்களும் நெக்டா புளு, கிளிஸ்டெனிங் கிரே, சில்கி சில்வர், டின்செல் புளு, அப்டவுன் ரெட் மற்றும் பியல் ஆர்க்டிக் வைட் என பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. 

இதுதவிர இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் டின்செல் புளு/மிட்நைட் பிளாக், டின்செல் புளு/பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் அப்டவுன் ரெட்/மிட்நைட் பிளாக் உள்ளிட்ட டூயல்-டோன் நிறங்களிலும் கிடைக்கும்.
Tags:    

Similar News