செய்திகள்
கோப்புபடம்

ஓணம் பண்டிகை உடுமலையில் காய்கறிகள் வாங்க குவிந்த கேரள வியாபாரிகள்

Published On 2021-08-20 09:41 GMT   |   Update On 2021-08-20 09:41 GMT
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, வழக்கமான வியாபாரம் இல்லை. இருப்பினும் ஓரளவு வியாபாரிகள் வந்து காய்கறிகள் கொள்முதல் செய்தனர்.
உடுமலை:

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, வழக்கமான வியாபாரம் இல்லை. இருப்பினும் ஓரளவு வியாபாரிகள் வந்து காய்கறிகள் கொள்முதல் செய்தனர். 

உடுமலை நகராட்சி சந்தைக்கு சுற்றுப்புற பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், பொறியல் தட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் வரத்து உள்ளது.

இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மாநிலம் மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கும் வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து ஏல முறையில் விலை நிர்ணயித்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால் உடுமலை சந்தையில் கேரளா மாநில வியாபாரிகள் அதிகளவு காய்கறிகளை கொள்முதல் செய்தனர். இதனால் காய்கறிகளின் விலையும் ஓரளவு உயர்ந்தது. தக்காளி, கத்தரி, பொறியல் தட்டை உள்ளிட்ட காய்கறிகள் விலையும் கிலோவுக்கு 5 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, வழக்கமான வியாபாரம் இல்லை. இருப்பினும் ஓரளவு வியாபாரிகள் வந்து காய்கறிகள் கொள்முதல் செய்தனர். 

நேற்றுமுன்தினம் காய்கறிகளிகளின் விலை திடீரென உயர்ந்து, கொள்முதல் முடிந்ததும் சரிந்தது. நேற்று காய்கறிகளின் விலையில் சரிவு காணப்பட்டது என்றனர். உழவர் சந்தையிலும், காய்கறிகளின் விலை கிலோவுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News