செய்திகள்
தாராபுரம் ஒன்றியம் காட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் 12 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் - பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

Published On 2021-10-09 09:17 GMT   |   Update On 2021-10-09 09:17 GMT
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 19 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 7 வார்டு உறுப்பினர்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால்  12 பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

காங்கேயம் ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சியின் 10-வது வார்டு உறுப்பினர் பதவி, தாராபுரம் ஒன்றிய த்தில் 12-வது வார்டு உறுப்பினர் பதவி, அவினாசி ஒன்றியத்தில் கருவலூர் ஊராட்சி தலைவர், மூலனூர் ஒன்றியத்தில் எரிசினம் பாளையம் ஊராட்சி தலைவர், உடுமலை ஒன்றியத்தில் ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு இன்று இடைத்தேர்தல்  நடைபெற்றது.

இதேப்போல் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி 9-வது வார்டு, ராமநாதபுரம் ஊராட்சி 2-வது வார்டு, தாராபுரம் ஒன்றியத்தில் பொன்னாபுரம் ஊராட்சியில் 1-வது வார்டு, குடிமங்கலம் ஒன்றியத்தில் ஆமந்தக்கடவு ஊராட்சியில் 5-வது வார்டு.

மேலும் காங்கேயம் ஒன்றியத்தில் கணபதிபாளையம் ஊராட்சியில் 5-வது வார்டு, குண்டடம் ஒன்றியத்தில் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சியில் 8-வது வார்டு, மூலனூர் ஒன்றியத்தில் கருப்பன்வலசு ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பல்லடம் ஒன்றியத்தில் மாணிக்காபுரம் ஊராட்சியில் 5-வது வார்டு, பணிக்கம்பட்டி ஊராட்சியில் 8-வது வார்டு, பொங்கலூர் ஒன்றியத்தில் அவினாசிப்பாளையம் ஊராட்சியில் 8-வது வார்டு, உகாயனூர் ஊராட்சியில் 5-வது வார்டு, ஊத்துக்குளி ஒன்றியத்தில் கணபதிபாளையம் ஊராட்சியில் 5-வது வார்டு.

மேலும் வடுகபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு, வெள்ளகோவில் ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் 1-வது வார்டு என மொத்தம் 14 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 7 வார்டுகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இதனால் மற்ற 7 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் 140 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் மிகக்குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வாக்களிக்க வந்தனர். அதன்பிறகு வாக்காளர்கள் கூட்டம் அதிகரித்தது. 

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற சீட்டும், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற சீட்டும், ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற சீட்டும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற சீட்டும் பயன்படுத்தப்படுகிறது.  

வெள்ளகோவில் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ஒரு வார்டு மக்கள் மட்டும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மற்றும் ஒரு வார்டு உறுப்பினர் என 2 ஓட்டுக்களை பதிவு செய்தனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை பெற உள்ளது.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குச்சாவடிக்குள் இருக்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  
Tags:    

Similar News