செய்திகள்
கொரோனா வைரஸ்

பெங்களூர் சென்று திரும்பிய மதுரை பெண்கள் 3 பேருக்கு கொரோனா அறிகுறியா?

Published On 2020-03-26 10:06 GMT   |   Update On 2020-03-26 10:06 GMT
பெங்களூர் சென்று திரும்பிய மதுரையைச் சேர்ந்த 3 பெண்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததா? என்று சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மதுரை:

மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த 3 பெண்கள் கடந்த 20-ந்தேதி பெங்களூர் சென்றனர். அங்கு ஒருநாள் தங்கி விட்டு மறுநாள் மதுரை திரும்பினர்.

அதன்பிறகு அவர்களுக்கு இருமல், சளி, தொண்டை கரகரப்பு போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 3 பெண்களும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்ற கோணத்தில் பரிசோதனை நடந்தது. அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் 3 பெண்களும் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். அவர்களை சுகாதாரத்துறையினர் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தினர். அதன் பேரில் 3 பெண்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 8 பேர் கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் 3 பெண்கள் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கருதி சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News