தொழில்நுட்பம்
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1

விரைவில் இந்தியா வரும் புது மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்

Published On 2021-09-13 04:19 GMT   |   Update On 2021-09-13 04:19 GMT
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்த மாதம் புதிய ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் சீரிஸ் மாடல்களுடன் இந்திய சந்தையில் ரீ-எண்ட்ரி கொடுத்தது. இந்த நிலையில், இன் நோட் 1 ப்ரோ இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.



முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆனது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் இ7748 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் புல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம். இந்தியாவில் புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
Tags:    

Similar News