தொழில்நுட்பச் செய்திகள்
பிக்ஸல் ரிப்பேர்

சாம்சங்கை தொடர்ந்து கூகுளும் அறிவித்த ‘நமக்கு நாமே’ திட்டம்

Published On 2022-04-11 06:54 GMT   |   Update On 2022-04-11 06:54 GMT
ஏற்கனவே சாம்சங் இதேபோன்று ரிப்பேர் சேவையை அறிவித்துள்ள நிலையில், தற்போது கூகுளும் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் தனது பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை, வாடிக்கையாளர்களே ரிப்பேர் செய்யும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக iFixit என்ற நிறுவனத்துடன் இணைந்து கூகுள் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பிக்ஸல் போன்களை ரிப்பேர் செய்வதற்கு தேவையான உண்மையான உதிரி பாகங்களுடன், எவ்வாறு ரிப்பேர் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டியையும் வழங்கப்படுகிறது.

உதிரி பாகங்களில் பேட்டரிக்கள், டிஸ்பிளேக்கள், கேமராக்கள் மற்றும் பிற முக்கிய உதிரி பாகங்களும் வழங்கப்படவுள்ளன. மேலும் போனை ரிப்பேர் செய்ய தேவையான ஸ்க்ரூடிரைவர் பிட்கள், ஸ்பட்ஜர்ஸ் ஆகியற்றையும் வழங்குகிறது. 

இந்த சேவை பிக்ஸல் 2 முதல் பிக்ஸல் 6 ப்ரோ வரையிலான போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் பிக்ஸல் போன்களுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் பிற நாடுகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே சாம்சங் இதேபோன்று ரிப்பேர் சேவையை அறிவித்துள்ள நிலையில், தற்போது கூகுளும் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.
Tags:    

Similar News