பெண்கள் உலகம்
பெண்கள் ‘எம்பிராய்டரி’ தொழிலிலும் லாபம் பார்க்கலாம்

பெண்கள் ‘எம்பிராய்டரி’ தொழிலிலும் லாபம் பார்க்கலாம்

Published On 2021-12-04 03:29 GMT   |   Update On 2021-12-04 06:04 GMT
பெண்கள் செல்போன் வைக்க பயன்படுத்தும் உறைகள் எம்பிராய்டரி வேலைபாடு இருந்தால், அவர்களை கவரலாம். மிக குறைந்த மூலத்தனத்தில் எம்பிராய்டரி வேலைகளை செய்யலாம்.
பொறுமை நிறைந்த தொழில் என்றால் அது ‘எம்பிராய்டரி’ தொழில் என்றால் அது மிகையாகாது. உடுத்தும் உடைகளில் இருந்து வீட்டை அலங்கரிக்கும் திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள் முதல் செல்போன் கவர்கள் வரை இன்று எம்பிராய்டரியில் வந்து விட்டன. அதிலும் எம்பிராய்டரி வேலையில் பல்வேறு பூக்களை வரைந்து காண்பித்து அழகுபடுத்தினால் அதற்கு வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து விடுகிறது.

கற்பது எளிது

எம்பிராய்டரி தொழிலை கற்பது எளிது. தற்போதைய காலக்கட்டத்தில் புத்தகங்கள் மூலமும், டி.வி. நிகழ்ச்சிகள் மூலமும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எம்பிராய்டரியை கற்றுத்தருகிறார்கள். எனவே இதை கற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. அதனை எந்த வகையான வேலைபாடுகளில் எம்பிராய்டரி செய்தால் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்பதை சர்வே மூலம் அறிந்து கொள்வது நல்லது.

நீங்கள் வெளியே செல்லும் போது உள்ள கடைகளில் விசாரித்தாலே தெரிந்து கொள்ள முடியும். முக்கியமாக பேன்சி விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கேட்டால் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. கேரம் போர்டில் உள்ள 4 ஓட்டைகளிலும் விழும் காய்கள் கீழே விழாமல் இருக்க ஒரு வலை பின்னப்பட்டிருக்கும். அதுவும் எம்பிராய்டரிதான். அதன் தேவையை அறிந்து தயாரித்து கொடுத்தாலும் லாபம் பார்க்கலாம். அதற்கு ஒரு ஊசியும், குரோஷா நூலும் தான் தேவை. இவை மட்டும் உங்கள் மூலதனம் ஆகும்.

வருமானம் பார்க்கலாம்

எம்பிராய்டரி மற்றும் குரோஷா வலை பின்னத்தெரிந்தவர்களுக்கு இது மிகவும் சுலபம். ஒரு பண்டல் குரோஷா நூலில் சாதாரண கேரம் போர்டு வலையாக இருநதால் 8 வலைகள் பின்னலாம். இன்னும் கொஞ்சம் உங்கள் மூளையை பயன்படுத்தி சற்று வித்தியாசமாக வலை அமைப்பை மாற்றினால் நீங்கள் பின்னும் வலைக்கு ஏற்ப நூலின் எண்ணிக்கை மாறுபடும். வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு, இந்த வலை பின்னும் பணியை தொடர்ந்தால் ஒரு நாளைக்கு 5 டஜன் வலைகள் வரை பின்ன வாய்ப்புகள் உள்ளன.

மேலும் சில நிறுவனங்கள் எம்பிராய்டரி பின்னி தருக்கூறி ஆர்டர்களும் கொடுக்கின்றன. அதனை பெற்று எம்பிராய்டரி வேலைபாடுகளை செய்து கொடுத்தால் நல்ல வருமானம் கிடைக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் இல்லாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அதில் குறிப்பாக பெண்கள் செல்போன் வைக்க பயன்படுத்தும் உறைகள் எம்பிராய்டரி வேலைபாடு இருந்தால், அவர்களை கவரலாம். மிக குறைந்த மூலத்தனத்தில் எம்பிராய்டரி வேலைகளை செய்யலாம். சேலைகள், சுடிதார்கள் உள்பட ஆடைகளிலும் எம்பிராய்டரி வேலைகளை செய்து இந்த தொழிலும் நல்ல லாபம் பார்க்கலாம்.
Tags:    

Similar News