செய்திகள்
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி

கொரோனா காலம் ஆசியான் உறுப்பு நாடுகள், இந்தியாவின் நட்புறவுக்கு பரீட்சையாக விளங்கியது - பிரதமர் மோடி

Published On 2021-10-28 20:47 GMT   |   Update On 2021-10-28 20:47 GMT
ஆசியான் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் உடனான இந்தியாவின் உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

18-வது ஆசியான்(ASEAN)-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

ஆசியான்-இந்தியா இடையேயான நீடித்த ஒத்துழைப்பு, கொரோனா பெருந்தொற்று நிலவரம், சுகாதாரம், வர்த்தகம், கல்வி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்த உச்சி மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், இந்த சவாலான காலகட்டம் ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியாவின் நட்புறவுக்கு பரீட்சையாக விளங்கியது. இந்தியாவும் ஆசியான் நாடுகளும் ஆயிரம் ஆண்டுகளாக துடிப்புள்ள உறவை கொண்டிருக்கிறது என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் இந்தியா-ஆசியான் நாடுகள் இடையிலான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என உறுதியளித்தார். 

Tags:    

Similar News