செய்திகள்
வாஷிங்டன் சுந்தர்

பவர்பிளே-யில் பந்து வீசுவது மிகக்கடினம்: எனக்கு அது உற்சாகத்தை கொடுக்கிறது- வாஷிங்டன் சுந்தர்

Published On 2019-12-04 12:17 GMT   |   Update On 2019-12-04 12:17 GMT
டி20 கிரிக்கெட் போட்டியில் பவர்பிளே-யில் பந்து வீசுவது மிகக்கடினம், அது உற்சாகம் கொடுக்கிறது என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். தற்போதைய இந்திய அணியில் வலது கை ஃபிங்கர் ஸ்பின்னர் என்றால் இவர்தான். இந்திய அணி இவரை பெரும்பாலும் பவர்பிளே ஓவரில்தான் பந்து வீச பயன்படுத்துகிறது.

பவர்பிளே-யில் பந்து வீசுவது கடினமானது. என்றாலும், அது எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும்போது ‘‘டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே-யில் பந்து வீசுவது மிகவும் கடினமானது. சரியான லெந்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும். இது மிகவும் கஷ்டமானது. நிச்சயமாக தவறுகள் நடைபெறலாம்.

கடிமான வேலை என்றாலும், எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. பவர்பிளேயில் ஒரே நேரத்தில் இடது கை பேட்ஸ்மேனுக்கும், வலது கை பேட்ஸ்மேன்னும் பந்து வீசுவது சவாலானது. டி20 கிரிக்கெட்டில் கடந்த மூன்று வருடங்களாக எனக்கு இந்த வேலை தரப்பட்டுள்ளது. இதை அனுபவித்து மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News