செய்திகள்
மம்தா பானர்ஜி

நந்திகிராம் தொகுதியில் திருப்பம்... சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார் மம்தா

Published On 2021-05-02 13:18 GMT   |   Update On 2021-05-02 13:18 GMT
ஒட்டுமொத்த முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தின் அடிப்படையில் பார்த்தால், திரிணாமுல் காங்கிரஸ் மெஜாரிட்டிக்கு தேவையான 148 இடங்களை விட அதிக இடங்களை கைப்பற்றுகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பாஜக சார்பில் போட்டியிட்ட அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மம்தா பின்தங்கியிருந்தார். மதியத்திற்கு பிறகு அவர் முன்னிலை பெற்றதாக தகவல் வெளியானது. 
 
பின்னர், வாக்கு எண்ணிக்கை நிறைவில் சுவேந்து அதிகாரியை, மம்தா 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக செய்தி வெளியானது. இந்த வெற்றியை தொண்டர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலில், மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக மம்தாவும் கூறி உள்ளார்.

ஒட்டுமொத்த முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தின் அடிப்படையில் பார்க்கையில், திரிணாமுல் காங்கிரஸ் மெஜாரிட்டிக்கு தேவையான 148 இடங்களை விட அதிக இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. மாலை நிலவரப்படி 213 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்தது. பாஜக கூட்டணி 78 இடங்களில் முன்னிலையில் இருந்தது. எனவே, மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. 
Tags:    

Similar News