ஆன்மிகம்
காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது

காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது

Published On 2021-11-06 06:16 GMT   |   Update On 2021-11-06 06:16 GMT
குமரக்கோட்டம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, கொடிமரத்தில் வேல், மயில், சேவல் பொறிக்கப்பட்ட கொடி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் சூழ கொடியேற்ற திருவிழா நடைபெற்றது.
முருகப்பெருமானின் கந்த புராணம் அரங்கேறிய புகழ் பெற்ற காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி குமரக்கோட்டம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, கொடிமரத்தில் வேல், மயில், சேவல் பொறிக்கப்பட்ட கொடி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் சூழ கொடியேற்ற திருவிழா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயா, கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News