செய்திகள்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று காலையில் தடுப்பூசி போடப்பட்டது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-05-01 08:57 GMT   |   Update On 2021-05-01 10:16 GMT
நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள் மட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சென்னை :

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள் மட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதில் 45 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானோருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டது. 2-வது தவணை தடுப்பூசி போடும் பணிகளில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2-வது தவணை தடுப்பூசி போடுபவர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதையொட்டி ஆன்லைனில் நாடு முழுவதும் 3 கோடி பேர் வரை முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

 



தமிழக அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முதல் கட்டமாக 1½ கோடி தடுப்பூசியை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்தது. ஆனால் மத்திய அரசு இன்னும் தடுப்பூசியை அனுப்பி வைக்கவில்லை.

இதனால் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படவில்லை.

ஆனால் சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று காலையில் தடுப்பூசி போடப்பட்டது.

ஒரு தடுப்பூசிக்கு ரூ. 850 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், இதுபற்றி எங்களுக்கு எந்த தகவலும் அவர்கள் தெரிவிக்கவில்லை. அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் எவ்வளவு தடுப்பூசி மருந்து கையிருப்பு உள்ளது? பொது மக்களிடம் ஒரு தடுப்பூசிக்கு எவ்வளவு தொகை வசூலிக்கிறார்கள் என்ற விவரத்தை அரசுக்கு அவர்கள் முறைப்படி தெரிவிக்க வேண்டும்’ என்றனர்.

Tags:    

Similar News