செய்திகள்
கோவில்

தமிழ்நாடு முழுவதும் 1,492 கோவில்களில் கணினி வழியாக ரூ.14 கோடி வாடகை வசூல்

Published On 2021-11-18 08:37 GMT   |   Update On 2021-11-18 08:37 GMT
கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை:

5,720 கோவில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு, 1492 கோவில்கள் மூலமாக இதுவரை ரூ.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

கணினி மூலம் வாடகை, குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர், வாடகைதாரர்கள் வழக்கம் போல் கோவில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி கணினி மூலம் ரசீதினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை வசூல் மையம் அமைக்க இயலாத நிலையில் உள்ள கோவில்களில் வாடகை செலுத்த விரும்புவோர் அருகில் உள்ள பெரிய கோவில்களில் அமைந்துள்ள பொது வசூல் மையத்தில் கேட்பு தொகையினை செலுத்திக் கொள்ளலாம்.

கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News