செய்திகள்
பிரதமர் மோடியுடன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தலைவர் ஜான் பாண்டியன் சந்தித்து பேசிய காட்சி

பிரதமர் மோடியுடன் ஜான் பாண்டியன் சந்திப்பு

Published On 2019-11-21 20:03 GMT   |   Update On 2019-11-21 20:03 GMT
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தலைவர் ஜான் பாண்டியன், தனது மனைவி பிரிசில்லா பாண்டியனுடன் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதாவோடு கூட்டணி அமைத்த கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வருகிறார்கள். சமீபத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரதமரை சந்தித்தார். இந்த நிலையில் நேற்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தலைவர் ஜான் பாண்டியன், தனது மனைவி பிரிசில்லா பாண்டியனுடன் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து ஜான் பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிரதமரை சந்தித்தபோது, தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றுவது, 7 உட்பிரிவுகள் அடங்கிய அரசாணையை வெளியிடுவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சரும் இதை பேசினார்கள். அதை நான் நினைவூட்டினேன். இதனை கனிவோடு கேட்ட பிரதமர், கூடிய விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்’’ என்றார்.
Tags:    

Similar News