செய்திகள்
கோப்புப்படம்

அரியானாவில் விஷ சாராயத்துக்கு மேலும் 11 பேர் பலி - 4 நாட்களில் 31 பேர் உயிரிழந்த சோகம்

Published On 2020-11-05 21:31 GMT   |   Update On 2020-11-05 21:31 GMT
அரியானாவில் விஷ சாராயத்துக்கு மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 4 நாட்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்து விட்டது.
சண்டிகர்:

அரியானாவின் சோனிபட் மற்றும் பானிபட் மாவட்டங்களில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் சமீபத்தில் இந்த சாராயம் குடித்த பலருக்கும் வாந்தி உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டன.

இந்த விஷ சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து மரணங்களும் நிகழ்ந்தன. அந்தவகையில் நேற்று முன்தினம் வரை 20 பேர் இந்த மாவட்டங்களில் அடுத்தடுத்து பலியாகினர்.

இந்த நிலையில் நேற்றும் சோனிபட் மாவட்டத்தில் 7 பேரும், பானிபட் மாவட்டத்தில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களும் விஷ சாராயம் குடித்திருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்து விட்டது. இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே சோனிபட் போலீசார் கர்காவுடா பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த சாராய ஆலை ஒன்றை கண்டுபிடித்து அழித்தனர். இது தொடர்பாக ஒருவரை அவர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News